இலங்கையில் காற்றாலை திட்டம் | அதானி குழுமம் தேர்வானதற்கு பொறியாளர்கள் சங்கம் எதிர்ப்பு

கொழும்பு: இலங்கை மன்னாரில் 500 மெகாவாட் காற்றலைத் திட்டத்தை அதானிக் குழுமத்துக்கு நேரடியாகவழங்க இலங்கை நாடாளு மன்றத்தில் சட்ட திருத்தம் நிறைவேற்றியது.

அதானிக்கு மின் உற்பத்தித் திட்டத்தை ஒதுக்கீடு செய்யவே சட்டத்தில் அவசரமாக திருத்தம் செய்வதாக இலங்கை மின் வாரிய பொறியாளர்கள் சங்கம் போராட்டத்தில் ஈடுபட்டது. இதையெடுத்தே மின் வாரியத் தலைவர் பெர்டினான்டோவை பொது நிறுவனங்களுக்கான நாடாளுமன்றக் குழு விசார ணைக்கு அழைத்தது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று நடந்தவிசாரணையில் ‘எதன் அடிப்படையில் 500 மெகாவாட் திட்டத்துக்கு அதானி குழுமம் தேர்ந்தெடுக்கப்பட்டது’ என்று அக்குழு பெர்டினான்டோவிடம் கேள்வி எழுப்பியது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/e2tvSJ3
via IFTTT
Test ads text